Thursday 2nd of May 2024 08:08:27 AM GMT

LANGUAGE - TAMIL
வேம்பு
வெறுக்க முடியாத வேம்பு!

வெறுக்க முடியாத வேம்பு!


வேம்பு நம் பாரம்பரியத்தில் நிவாரண மருந்தாக பயன்பட்டு வருகிறது. இன்றும் கூட பல் துலக்க வேப்பங்குச்சியையே பலர் பயன்படுத்துகின்றனர். சின்னம்மை வந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வேப்பிலையை தண்ணீரில் ஊற வைத்து, கசாயம் போல கொடுக்கும் வழக்கம் உள்ளது.

வேப்பெண்ணெய், மற்ற எண்ணெய்களை விட மணம் சற்று காட்டமாக இருந்தாலும், அதன் நற்குணங்கள் ஏராளம். சரும பராமரிப்பு பொருட்கள் முதல் கொசு விரட்டிகள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படக் கூடியதாகும்.

வேப்பெண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் சருமத்துக்கு நன்மை தரக்கூடிய பின்வரும் உட்பொருட்கள் உள்ளன: வைட்டமின் ஈ, டிரைகிளிசரைட், கால்சியம், ஆன்டியாக்சிடென்ட். இந்த உட்பொருட்களால் தான் வேம்பு சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி எக்சிமா மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்சினைகளையும் அடியோடு அகற்ற உதவுகிறது.

வேம்பின் ஆன்டிஃபங்கல், ஆன்டி-டயபட்டிக், ஆன்டி-பேக்டீரியல், ஆன்டிவைரல், அந்தெல்மின்டிக், கான்ட்ராசெப்டிவ் மற்றும் நிவாரண குணங்கள் நோய்த் தொற்றை குணப்படுத்துகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு புண் விரைவில் ஆறுவதற்கு வேப்பெண்ணெய் பெரிதும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பருக்களை அது நீக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

எப்படி பயன்படுத்தலாம்?

வேப்பெண்ணெய் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. இன்றைக்கும், வீடுகளுக்கு அருகில் வேப்பமரத்தை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அது காற்றை தூய்மைப்படுத்தி பூச்சிகளை வீட்டுக்குள் அண்ட விடுவதில்லை.

பெண்களின் அழகு பராமரிப்புக்கு பெரிதும் பயன்படும் சோப்பு போன்றவற்றில் அது அன்றும் இன்றும் என்றும் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது.


Category: வாழ்வு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE